நரசிங்கபுரம் பகுதியில் அடிப்படை தேவைகள் செய்து தரப்படும்
ஆத்துார், நரசிங்கபுரம் நகர் பகுதியில், அடிப்படை தேவைகள் செய்து தரப்படும் என, கவுன்சிலர் கூட்டத்தில், நகராட்சி தலைவர் உறுதியளித்தார்.ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ், 'மக்களுக்கு பணிகள் செய்வதற்காக, வார்டு மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். மக்களின் பிரச்னைகளை கூட்டத்தில் தெரிவித்தால், சம்மந்தப்பட்ட துறை மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.தலைவர் அலெக்சாண்டர், 'நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் மக்களின் பிரச்னைகள், அடிப்படை தேவைகள் செய்து தரப்படும்' என்றார்.