உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியை சீண்டியவருக்கு அடி

மாணவியை சீண்டியவருக்கு அடி

தாரமங்கலம்:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர், 20 வயது பெண். இவர், தாரமங்கலத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில் முதலாண்டு படிக்கிறார். நேற்று காலை, ஓமலுாரில் இருந்து, அரசு பஸ்சில் கல்லுாரிக்கு வந்து கொண்டிருந்தார். அதே பஸ்சில் ஓமலுார், பொட்டியபுரம், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பச்சியப்பன், 50, மாணவி அமர்ந்திருந்த சீட்டுக்கு, பின் சீட்டில் அமர்ந்திருந்தார். பெரியாம்பட்டி அருகே வந்தபோது, அவர், பஸ் கண்ணாடியை தள்ளுவதுபோல், மாணவியிடம் சில்மிஷம் செய்தார். பின் தாரமங்கலம் வந்ததும், மாணவி தகவல்படி, அங்கிருந்த மக்கள், பச்சியப்பனை பிடித்து தர்ம அடி கொடுத்து, தாரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், பச்சியப்பனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை