உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12 டன் கல்லால் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை பிரதிஷ்டை

12 டன் கல்லால் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை பிரதிஷ்டை

ஓமலுார்: காடையாம்பட்டி, ஊமகவுண்டன்பட்டியில் உள்ள எல்லை பத்ரகாளியம்மன் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. அதன் வெளி பிரகாரத்தில், 12 டன்னில், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளியம்மன் சிலை, பொக்லைன் உதவியுடன் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. 8 கைகளுடன் சூலாயுதம், வாள், சங்கு, கும்பம், கடாயுதம், ஸ்ரீ சக்கரம் ஏந்தி சாந்த ரூபமாக காட்சியளித்த அம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே, 16ல் முகூர்த்தக்கால் நட்டு விழா தொடங்கி, 25ல் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை