தொட்டி கட்ட பூமி பூஜை
தலைவாசல், தலைவாசல், வீரகனுார் டவுன் பஞ்சாயத்து தென்கரையில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை தொட்டி அமைக்க, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். டவுன் பஞ்சாயத்து தலைவி கமலா, துணைத்தலைவர் அழகுவேல், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.