உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக், மொபட் திருடியோர் கைது

பைக், மொபட் திருடியோர் கைது

சேலம்: சேலம், குமரன் நகரை சேர்ந்தவர் கவியரசன், 31. நேற்று முன்தினம் இரவு, செவ்வாய்ப்பேட்டை வெங்கடப்பன் சாலையில் உள்ள மளிகை கடை முன் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது, பைக்கை காணவில்லை. அதேபோல் நேற்று முன்தினம், முள்ளுவாடி கேட், மக்கான் தெருவை சேர்ந்த இப்ராகீம், 27, ஆக்டிவா மொபட்டை, சீதாராம் செட்டி சாலையில் உள்ள இரும்பு கடை முன் நிறுத்தியிருந்த நிலையில் காணவில்லை.இருவரது புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்ததில், சேலம், டி.பெருமாபாளையம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த சவுந்தரராஜன், 21, பைக் திருடியதும், நடராஜன், 24, மொபட் திருடியதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், வாகனங்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ