பைக், மொபட் எரிப்பு கேமராவில் சிக்கினர்
சேலம்:சேலம், ஜாகீர் அம்மாபாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 32. இவர், 'சி.டி., 100' பைக், ஸ்கூட்டி பெப் வாகனங்களை, வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு இரு வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தன. அந்த வழியே சென்றவர்கள் பார்த்து சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் இரு வாகனங்களும் நாசமாகின. அருகே நிறுத்தியிருந்த ஆட்டோ லேசான சேதம் அடைந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.