பைக் திருடியவர் சிக்கினார்
சேலம், சேலம், கருப்பூர், வெள்ளக்கல்பட்டி, பாரதி நகரை சேர்ந்தவர் முருகன், 43. இவர் காய்கறி வாங்க, கடந்த, 10ல், குரங்குச்சாவடி சந்தைக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்துள்ளார். சாஸ்திரி சாலையில் நிறுத்திவிட்டு, காய்கறி வாங்கி வந்து விட்டு திரும்பியபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின் நேற்று, செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் சாலையை சேர்ந்த மாரிமுத்து, 49, என்பவரை கைது செய்தனர்.