உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயிர்ம வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்

உயிர்ம வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்

வீரபாண்டி: சேலம் மாவட்ட வேளாண் துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், இயற்கை வேளாண் அல்லது அங்கக வேளாண் எனும், உயிர்ம வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம், நெய்க்காரப்பட்டியில் நேற்று நடந்தது.வேளாண் துணை இயக்குனர் கண்ணன்(மத்திய அரசு திட்டங்கள்) வரவேற்றார். இணை இயக்குனர் சிங்காரம் தலைமை வகித்தார். வீரபாண்டி, 'அட்மா' குழு தலைவர் வெண்ணிலா, கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் விழா மலர் வெளியிடப்பட்டது. இதில் பூச்சி மேலாண் குறித்து துணை இயக்குனர் செல்வம்; பயிர் பாதுகாப்பு குறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி; மண் வளம் குறித்து மண்ணியல் பேராசிரியர் சந்திரசேகரன்; காய்கறி உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மாலதி; உயிர்ம சான்றிளிப்பு பற்றி விதைச்சான்று உதவி இயக்குனர் நவநீ-தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பேராசிரியர்கள், விவசாயி-களின் பல்வேறு கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ