வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜாக்கிரதையாக வண்டி ஓட்டுங்கள்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் அதிக படியான காட்டெருமைகள் வாழ்ந்து வருகிறது. இந்த காட்டெருமைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றிதிரிவதும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வருவது வழக்கம். இந்நிலையில் ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் பிரதான மலைப்பாதையில் இன்று காலை ஒற்றை காட்டெருமை சுற்றி திரிந்தது. அப்போது அந்த காட்டெருமை சாலையின் குறுக்கே வந்து நின்றதால் அந்த சாலையில் சென்ற வாகனங்களை வாகன ஓட்டிகள் அப்படியே நிறுத்திவிட்டனர். பிறகு சாலையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த ஒற்றை காட்டெருமை சிறிது நேரம் கழித்து சாலையின் ஓரத்தில் இருந்த காபி தோட்டத்திற்குள் சென்றது. பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
ஜாக்கிரதையாக வண்டி ஓட்டுங்கள்