லாரிகளில் எருமைகளை அடைத்து ஏற்றிச்சென்ற கொடுமை வழிமறித்த பா.ஜ.,வினர்; அனுப்பிவைத்த போலீசார்
அ.பட்டணம்: வேலுாரில் இருந்து கேளராவுக்கு இரு லாரிகளில் அதிகளவில் மாடுகளை அடைத்து ஏற்றிச்சென்றதால், பா.ஜ.,வினர் வழிம-றித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் உரிய ஆவ-ணங்களுடன் செல்வதாக கூறி, லாரிகளை போலீசார் விடுவித்து அனுப்பிவைத்தனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், அரூர் நெடுஞ்-சாலை வழியே லாரிகளில் அதிகளவில் மாடுகளை அடைத்து வைத்து கொண்டு செல்வதாக, பா.ஜ.,வினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இதை அறிந்து சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முக-நாதன் தலைமையில் அக்கட்சியினர், மதியம் 2:00 மணிக்கு வல-சையூர் அருகே இரு லாரிகளை வழிமறித்து நிறுத்தினர். தொடர்ந்து காரிப்பட்டி, வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்-தனர். அங்கு வந்து போலீசார் விசாரித்தனர்.தொடர்ந்து லாரிகளை, காரிப்பட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று டிரைவர், உரிமையாளரிடம் விசாரித்தனர். அப்போது வேலுாரில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்வது தெரிந்ததால் போலீசார் லாரிகளை விடுவித்-தனர்.இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், 'மாடுகளை நீண்ட துாரம் கொண்டு செல்லும்போது உரிய இட வசதியுடன் மாடுகளுக்கு இன்னல் இல்லாமல் கொண்டு செல்வது அவசியம்.ஆனால் செலவை குறைக்க, வாகனங்களில் அதிகளவில் ஏற்றி நீண்ட துாரம் கொண்டு செல்லும்போது மாடுகள் உடல்நிலை பாதிக்கப்படும். ஒன்றுடன் ஒன்று மோதி காயம் அடையும். இது ஒரு வகை துன்புறுத்தல்தான்' என்றனர்.