மதம் மாற துண்டு பிரசுரம் வழங்கல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.,நிர்வாகிகள்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, கிராமங்களில் வீடு வீடாக சென்று மதம் மாற துண்டு பிரசுரம் வழங்கியதால், பா.ஜ., நிர்வாகிகள் வாக்கு-வாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி அருகே, எம்.பெருமாபாளையம் பகுதி யில், நேற்று முன்தினம் விடுமுறை தினத்தையொட்டி காரில் சென்ற ஏழு பேர் கொண்ட கும்பல், வீடு வீடாக சென்று மதம் மாற துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர். இந்த தகவல் அப்பகுதி பா.ஜ., பட்டியல் அணி சேலம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் முருகனுக்கு கிடைத்தது.இதையடுத்து, பா.ஜ., நிர்வாகிகள் காரில் சென்ற, ஏழு பேர் கொண்ட கும்பலை மறித்து, பள்ளியில் படிக்கும் குழந்தைகளை எதற்காக மதம் மாற்ற பார்க்கிறீர்கள், நீங்கள் எந்த ஊர், பணத்திற்-காக எதற்கு இந்த வேலை செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த எண்ணத்தில், மீண்டும் ஊருக்குள் வரக்கூ-டாது என தெரிவித்து எச்சரித்து அனுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.