மேலும் செய்திகள்
மறைந்த கவர்னருக்கு அஞ்சலி
17-Aug-2025
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்
15-Aug-2025
சேலம் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவை ஒட்டி, பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மரவனேரியில் நேற்று நடந்தது.அதில் கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட பார்வையாளர் முருகேசன், பொதுச்செயலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத், ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக தலைவர் குமாரசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.அதேபோல் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், தலைவர் சண்முகநாதன் தலைமையில் கட்சியினர், வாழப்பாடியில் கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.மாவட்ட இளைஞர் அணி தலைவர் குணசேகரன், தெற்கு ஒன்றிய தலைவர் நெப்போலியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
17-Aug-2025
15-Aug-2025