உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கெம்பிளாஸ்டில் ரத்த தான முகாம்

கெம்பிளாஸ்டில் ரத்த தான முகாம்

மேட்டூர், கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தில், இலவச ரத்த தான முகாம் நடந்தது.சேலம் மாவட்டம், மேட்டூர் கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை, நங்கவள்ளி வட்டார, சந்தைதானம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தின், 3வது அலகில் ரத்த தான முகாம் நடந்தது.முகாமை கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவன தலைவர்கள் கஜேந்திரன், பழனிசாமி துவங்கி வைத்தனர். மேட்டூர் அரசு மருத்துவமனை பொது மருத்துவர் காயத்ரிதேவி, நங்கவள்ளி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ்குமார் ஆகியோர் ரத்த தான முகாமை நடத்தினர்.கெம்பிளாஸ்ட் நிறுவன துணைத் தலைவர்கள் ஸ்ரீராம்குமார், சக்கரவர்த்தி, மருத்துவர் ராஜேஷ்குமார், மெரூன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். முகாமில் நிறுவனத்தின், 76 ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி