மேலும் செய்திகள்
பா.ஜ., பேனர் மீண்டும் கிழிப்பு
24-Mar-2025
பனமரத்துப்பட்டிபனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 1,000 ஏக்கரில் உற்பத்தியாகும் அரளி, தினமும் காலை அறுவடை செய்யப்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.காலை 8:00 முதல் 10:00 மணி வரை, சேலம் - பனமரத்துப்பட்டி - கம்மாளப்பட்டி சாலையில், அரளி ஏற்றிய வாகனங்கள் அசுர வேகத்தில் பறக்கின்றன. அந்த நேரத்தில், பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.நேற்று காலை, 9:40 மணிக்கு சேலம் - பனமரத்துப்பட்டி சாலை ஒண்டிக்கடை பஸ் ஸ்டாபில் அசுர வேகத்தில் வந்த அரளி வாகனம் மோதி, சிறுவன் லாவினேஷ், 8, நெற்றியில் படுகாயம் அடைந்தார். கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோடீஸ்வரன் மகன் லாவினேஷ், ஒண்டிக்கடையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த போது, விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தை ஏற்படுத்திவர்கள், அந்த சிறுவனை மீட்டு, சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அதை தொடர்ந்து, அரளி ஏற்றி வந்த மற்ற வாகனங்களை, ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப்பில் தடுத்து நிறுத்திய மக்கள், வாகனங்களை அதிவேகமாக ஓட்டக்கூடாது என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனமரத்துப்பட்டி போலீசார் வந்து, மக்களை சமாதானம் செய்த பின், போராட்டம் கை விடப்பட்டது.
24-Mar-2025