விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
சேலம், உலக மார்பக புற்றுநோய் மாதத்தை ஒட்டி, சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி, கதிரியக்கவியல் பிரிவு மூலம் மார்பக புற்று நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, சேலம், ஜங்ஷனில் பேரணி நடத்தப்படடது.கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதில் கல்லுாரி மாணவர்கள் முகத்தில் முகமூடி அணிந்து, கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மார்பக புற்றுநோயை குறிக்கும் வண்ணத்தில் அலங்கார ஆடைகளை அணிந்து, 'புற்றுநோயை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; நிச்சயம் மாற்றம் நிகழும்' எனும் மைய கருத்தை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி, ஏ.வி.ஆர்., ரவுண்டானா வழியாக சென்று, மீண்டும் ஜங்ஷனில் முடிந்தது.தொடர்ந்து உழவர் சந்தை பகுதி யில் கையெழுத்து நிகழ்வு, விழிப்புணர்வு காணொலி நடத்தப்பட்டது. திரளானோர் பார்வையிட்டனர்.