உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் விழா ஒளிபரப்பு மின்தடையால் தவிப்பு

முதல்வர் விழா ஒளிபரப்பு மின்தடையால் தவிப்பு

சேலம், :லண்டன், 'ஆக்ஸ்போர்டு' பல்கலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, ஈ.வெ.ரா., படத்தை திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்வை, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், எல்.இ.டி., திரை மூலம், புது பஸ் ஸ்டாண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேயர் ராமச்சந்திரன், மாநகர் செயலர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள், மக்கள், பயணியர் பார்த்தனர்.அதேபோல் வாழப்பாடியில் உள்ள, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு, எல்.இ.டி., திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆனால், எல்.இ.டி., திரை வைத்தபின் மின்தடை ஏற்பட்டதால், முதல்வர் பேச்சை காண வந்த, கட்சி நிர்வாகிகள் சிரமத்துக்கு ஆளாகினர். சிலர் திரும்பி சென்றனர். ஒரு வழியாக, ஒன்றரை மணி நேரத்துக்கு பின், 'ஜெனரேட்டர்' பொருத்தி, முதல்வர் பேச்சை ஒளிபரப்பினர். முன்னதாக, மின்வாரிய அதிகாரிகளை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு கடிந்துகொண்டனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின்தடை ஏற்படவில்லை. குறைந்த மின் அழுத்தத்தால், எல்.இ.டி., வேலை செய்யவில்லை. உடனே சரிசெய்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை