மேலும் செய்திகள்
அனுமதியின்றி கருணாநிதி சிலை வைப்பால் விசாரணை
04-Jul-2025
வாழப்பாடி, வாழப்பாடி, அருநுாற்றுமலையை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி, 33. மாதையன், 47, ஜெயராம், 62, தேவராஜ், 30. இவர்கள், 20 பெட்டிகளில், 400 கிலோ தக்காளியை விற்க, சரக்கு வாகனத்தில், வாழப்பாடி நோக்கி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். பொன்னுசாமி ஓட்டினார். கீரைப்பட்டி அருகே சென்றபோது, ஒரு காட்டெருமை ஓடி வந்து, சரக்கு வாகனத்தில் மோதியது. இதில் வாகனம் கவிழ்ந்து, 400 கிலோ தக்காளியும் கொட்டி வீணானது. அதில் இருந்த, 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை, மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து ஜெயராம், தேவராஜ், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jul-2025