மருத்துவரை திட்டிய கட்டட ஓனருக்கு வலை
மருத்துவரைதிட்டிய கட்டடஓனருக்கு வலைசேலம், நவ. 9-சேலம், உடையாப்பட்டி, செங்காட்டை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 35. தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். 2022ல், சேலம், அழகாபுரத்தில் உள்ள முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின், 4ம் மாடியில், 49 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கினார். ஆனால் முருகானந்தம், கூடுதலாக பணம் கேட்டதால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மார்ச், 14ல் ஏற்பட்ட தகராறின்போது, முருகானந்தம், ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக, நேற்று முன்தினம் பிரியதர்ஷினி அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். இதனால், எஸ்.சி., எஸ்.டி., உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கட்டட உரிமையாளரை, போலீசார் தேடுகின்றனர்.