உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்கம்பத்தில் பைக் மோதி பஸ் கண்டக்டர் பலி

மின்கம்பத்தில் பைக் மோதி பஸ் கண்டக்டர் பலி

ஆத்துார்: ஆத்துார், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் கேசவன், 38. அரசு பஸ்சில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்தார். நேற்று ஆத்துாரில் இருந்து வளையமாதேவிக்கு, 'ஹீரோ' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். மதியம், 2:20 மணிக்கு, வளையமாதேவி பிரிவு சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி எதிரே, மின் கம்பம் மீது பைக் மோதியது. இதில் ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்ற கேசவன், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை