பஸ் - வேன் மோதல்: தப்பிய 60 பயணியர்
வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம் பிரிவு சாலை அருகே நேற்று காலை, 8:30 மணிக்கு, ஆத்துாரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.அப்போது சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வேன் மீது தனியார் பஸ் மோதியது. அதில் பஸ் டிரைவர், கண்டக்டர், வேன் டிரைவர் காயம் அடைந்தனர். பஸ்சில் பயணித்த, 60க்கும் மேற்பட்ட பயணியரும், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி போலீசார், போக்குவரத்தை சீர்படுத்தி விசாரிக்கின்றனர்.