பஸ் கண்ணாடி உடைப்பு
சேலம், சிதம்பரத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சேலம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணன் பஸ்சை ஓட்டி வந்துள்ளார். இரவு, 10:30 மணிக்கு சேலம் செரிரோடு, தமிழ்சங்கம் அருகே வந்தபோது பஸ்சின் பின்பக்க கண்ணாடியை, மர்ம நபர் ஒருவர் கற்களால் தாக்கியுள்ளார்.இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவர் முரளி கிருஷ்ணன், கண்டக்டர் சிவக்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.