மேலும் செய்திகள்
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
02-Jun-2025
சேலம், சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் அறிக்கை:டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்பட உள்ளது. அதற்கு, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் நிலம், கடல், வான் வெளியில் வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கு ஆண்டுக்கு தலா ஒருவருக்கு என, விருது வழங்கப்படும்.சாகச பந்தயங்களில் ஈடுபடுவோரின் திறமைகளை புதுப்பிக்கவும், சகிப்புத்தன்மை, குழுவாக இணைந்து செயல்பட்டு சாகசத்தை வெளிப்படுத்துவோரை ஊக்கப்படுத்த இந்த விருது வழங்கப்படுகிறது. சாகச துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தகுதியானவர்கள், வரும், 30க்குள், https://awards.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன், ஆன்லைன் மூலம் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
02-Jun-2025