உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காய்கறி பதப்படுத்த பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

காய்கறி பதப்படுத்த பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:தமிழ்நாடு உணவு பதப்படுத்தல், வேளாண் ஏற்றுமதி மேம்-பாட்டு கழக நிதி உதவியில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 19, 20ல் பழங்கள், காய்கறி பதப்படுத்தல், சேமித்தல், 'பேக்கிங்' குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. அதில் பங்கேற்போருக்கு அன்று உணவு வழங்குவதோடு, தமிழ்-நாடு வேளாண் பல்கலை சான்றிதழ் வழங்கப்படும். இலவச பயிற்சியில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 50 விவசாயிகள் மட்டும் பங்கேற்க முடியும். அதனால் 90955 13102 என்ற எண்ணில், பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !