உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி பெற அழைப்பு

போர்க்லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி பெற அழைப்பு

சேலம், சேலம் மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 'போர்க்லிப்ட் ஆப்பரேட்டர்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருவாய், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியம். வயது, 18 முதல், 35க்குள் இருப்பதுடன், குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ், வேலை வாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். பயிற்சி காலம் ஒரு மாதம். மேலும் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும். தாட்கோ இணையதளமான www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ