உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இலவசமாக பெற அழைப்பு

இலவசமாக பெற அழைப்பு

பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக பயறு வகை விதை தொகுப்பு வழங்கப்பட்டது. வேளாண்துறை சார்பில் காராமணி, அவரை அடங்கிய விதை தொகுப்பு, தோட்டக்கலை சார்பில் காய்கறி விதைகள், பழ செடிகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'இலவசமாக விதை தொகுப்பு பெற பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்.பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், ஆதார், ரேஷன் கார்டு நகலுடன் வந்து, விதை தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்' என்றனர்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றனர்.சித்தர்கோவில் வன விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து, பயறு வகை விதை, காய்கறி, பழச்செடிகள் தொகுப்பை, முன்னோடி விவசாயிகளுக்கு வழங்கினார். அட்மா குழு தலைவர் வெண்ணிலா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை