ரயிலில் கஞ்சா பறிமுதல்
சேலம்; செகந்திராபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்-பிரஸ் ரயில், நேற்று காலை சேலம் வந்தது. அப்-போது சேலம் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு பையை எடுத்து பார்த்-ததில், 5.5 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு, பறி-முதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.