மேலும் செய்திகள்
பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது
27-Nov-2024
சேலம்: சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், கேரளா பதிவெண் கொண்ட ஹூண்டாய் கார் நேற்று மதியம், வேகமாக சென்று கொண்டிருந்தது, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலம் அருகே, ஒரு வழி பாதை வழியாக வரும்போது, எதிரே பைக்கில் வந்த மூவர் மீதும், நடந்து சென்றவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அப்பகுதி மக்கள் நான்கு பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், காரின் டயர் வெடித்ததில் நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நின்றது. அப்போது காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். அப்பகுதி மக்கள் காரில் இருந்த இருவரை பிடித்து, கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தனர். பின் வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம், ஜோலுார் பகுதியை சேர்ந்த மன்னாராம் மகன் தீபக்குமார் என்பதும், மற்றொரு நபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட, 210 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது, பெங்களூருவில் இருந்து, போதை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.இது குறித்து போலீசார் கூறுகையில்,' தீபக்குமார் கூறிய தகவல்படி, நாமக்கல் மாவட்டத்தில் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நண்பரான பிறகு பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து, சப்ளை செய்வதாகவும் தெரிவித்துள்ளதார். மற்றொரு வாலிபர் குறித்தும், தப்பியோடிய இருவர் குறித்தும் விசாரித்து வருகிறோம்,' என்றனர்.
27-Nov-2024