உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீப்பிடித்து எரிந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்

ஈரோடு: ஈரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், மூன்று பேர் உயிர் தப்பினர்.திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம், குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சரவணன், 45; அதே பகுதியை சேர்ந்தவர் குணசே-கரன், 63; இவரின் மனைவி விஜயலட்சுமி. மூவரும் ஈரோடு அசோகபுரத்தில் உள்ள பனியன் மார்க்கெட்டுக்கு, டஸ்டர் காரில் நேற்று காலை வந்தனர். சரவணன் காரை ஓட்டினார். ஈரோடு-நசி-யனுார் சாலை வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே, 6:20 மணிக்கு வந்தபோது, காரில் கருகும் வாடை, கரும்புகை வந்தது. இதனால் உஷாரான சரவணன், காரை சாலையோரம் ஓரம் கட்டி நிறுத்த, மற்ற இருவரும் உடனடியாக இறங்கினர். சில நிமிடங்களில் தீப்-பிடித்து கார் எரிய துவங்கியது.ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, அரை மணி நேரம் போராடி அணைத்தனர். அதேசமயம் கார் முற்றிலும் எரிந்து விட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை