சுவரை துளையிட்டு கார் ேஷாரூமில் திருட்டு
சேலம், சேலம், கந்தம்பட்டியில், தனியார் கார் ேஷாரூம் உள்ளது. அதன் மேலாளர், மாமாங்கத்தை சேர்ந்த, ஸ்ரீதர், 34. கடந்த, 7 இரவு, அவர் ேஷாரூமை பூட்டிச்சென்றார். 9 காலை ேஷாரூமை திறந்தபோது பக்கவாட்டு பகுதியில் உள்ள சுவரில் துளையிடப்பட்டிருந்தது. அதன் வழியே மர்ம நபர்கள் புகுந்து, கல்லா பெட்டியில் இருந்த, 400 ரூபாயை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து ஸ்ரீதர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.