விம்ஸில் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் வார விழா
சேலம்: மே முதல் வாரம், சுகாதாரத்துறையினர் பங்களிப்பை பாராட்டி அதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும்படி, இரு-தய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் வார விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி சேலம், விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுா-ரியில், இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப பிரிவு மூலம் செயல்முறை விளக்க பயிற்சி நிகழ்வு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடந்தது.இத்தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்து, கல்-லுாரி டீன் செந்தில்குமார், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். விம்ஸ் மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் கலைவாணி, இருதய அறுவை சிகிச்-சையின்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சாதனங்கள் அவற்றின் செயல்பாடுகள், கையாளும் வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்தார்.பல்வேறு கல்லுாரி மாணவ மாணவியர், தொழில்நுட்பவியலா-ளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு மாணவர்கள், குளிரூட்-டியை கல்லுாரிக்கு அன்பளிப்பாக வழங்க, டீன் பெற்றுக்-கொண்டார். விழா ஏற்பாட்டை, கல்லுாரி இருதய அறுவை சிகிச்சை பிரிவு பொறுப்பாளர் ராகுல் மற்றும் ஆயிஷா செய்திருந்தனர்.