உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம், நாமக்கல் மண்டலத்தில் 11 மருந்து கடைகள் மீது வழக்கு

சேலம், நாமக்கல் மண்டலத்தில் 11 மருந்து கடைகள் மீது வழக்கு

சேலம்: சேலம், நாமக்கல் மண்டலங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. மருந்து ஆய்வாளர் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டது. இதில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனர் இல்லாமல் மருந்து கடை நடத்துவது, மருத்து கொள்முதல் பதிவேடு முறையாக பராமரிப்பின்மை, ரசீதில்லாமல், மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை போன்ற விதிமீறல் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சேலத்தில் செவ்வாய்ப்பேட்டை, குகை, அஸ்தம்பட்டி, 5 ரோடு, முதல் அக்ரஹாரம், அழகாபுரம் பகுதிகளில், ஆறு மருந்து கடைகள்; நாமக்கல் டவுனில் ஐந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து உதவி இயக்குனர்களான சேலம் மாரிமுத்து, நாமக்கல் சதீஷ் கூறுகையில், ''மருந்துகள், அழகு சாதன பொருட்கள் சட்டத்தில் விதிமீறிய, 11 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வலி நிவாரணி மாத்திரை முறைகேடு விற்பனை எதுவும் சிக்கவில்லை. மீறி விற்பது குறித்து தகவல் தெரிவித்தால் சேலம் மண்டலத்துக்கு, 99444 - 09891, நாமக்கல் மண்டலத்துக்கு, 97901 - 81414 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை