மேலும் செய்திகள்
வேளாங்கண்ணி சர்ச்சில் கவர்னர் ரவி பிரார்த்தனை
19-Sep-2024
சேலம்: சேலத்தில், கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய, 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலை கழகத்தில் நேற்று முன்தினம் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார். மத்திய அரசின் திட்டத்தை விளக்க வந்துள்ளதாக கூறி, கவர்னரை கண்டித்து, திராவிட விடுதலை கழகத்தினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொளத்துார் மணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் அனுமதியின்றி கூடியது, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டி கோஷம் எழுப்பியது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொளத்துார் மணி உட்பட, 70 பேர் மீது கருப்பூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
19-Sep-2024