உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொசு மருந்து இயந்திரம் வாங்கி முறைகேடு 5 இ.ஓ., உள்பட 11 பேர் மீது வழக்கு

கொசு மருந்து இயந்திரம் வாங்கி முறைகேடு 5 இ.ஓ., உள்பட 11 பேர் மீது வழக்கு

சேலம்,கொசு மருந்து இயந்திரம் வாங்கியதில் நடந்த முறைகேடு புகாரில், 5 டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் உள்பட, 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கீரிப்பட்டி, வீரகனுார், தாரமங்கலம், கொளத்துார், பி.என்.பட்டி ஆகிய டவுன் பஞ்சாயத்துகளில், 2018 - 19ல், டெங்கு உள்ளிட்ட நோய் தாக்குதலை தவிர்க்க, கொசு மருந்து அடிப்பதற்கான இயந்திரங்கள் வாங்கப்பட்டன. குறைந்த விலை கொண்ட இயந்திரங்களை, அதிக விலைக்கு வாங்கி, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்ததில், 5 டவுன் பஞ்சாயத்துகளிலும், தலா, 2.50 லட்சம் ரூபாய் கூடுதல் விலைக்கு இயந்திரம் வாங்கி, மொத்தம், 12.50 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது உறுதியானது. இதனால் நேற்று முன்தினம் போலீசார், அப்போதைய செயல் அலுவலர்களான வீரகனுார் வெங்கடாஜலம், கீரிப்பட்டி கவுர், கொளத்துார் ஞானசேகரன், தாரமங்கலம் குலோத்துங்கன், பி.என்.பட்டி கலாராணி ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்தனர். அத்துடன் அவர்களுக்கு இயந்திரம் வழங்கிய தனியார் நிறுவன உரிமையாளர்களான, ஜாகீர்உசேன், முத்துக்குமரன், கண்ணன், ரவீந்தரன், ராஜேஸ்வரி, நெடுஞ்செழியன் மீதும் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ