மாணவியை சீண்டி மிரட்டியவர் மீது வழக்கு
சேலம், சேலம், கன்னங்குறிச்சி, சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த, 20 வயது மாணவி, பி.பார்ம் படிக்கிறார். இவரது உறவினர் ஸ்ரீதர், 32. இவர், நேற்று மாணவி வீட்டுக்கு சென்று, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் குடும்பத்தை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி நேற்று அளித்த புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து, ஸ்ரீதர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.