உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீரமைப்பு பணிக்கு காவிரி நீரை நிறுத்தி கால்வாயில் திறப்பு

சீரமைப்பு பணிக்கு காவிரி நீரை நிறுத்தி கால்வாயில் திறப்பு

மேட்டூர்:மேட்டூர் அணை, 8 கண் மதகில் இருந்து கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு, காவிரியில் வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று, 8 கண் மதகு தண்ணீர் செல்லும் கால்வாய் குறுக்கே, தடுப்பணை சீரமைப்பு பணி நேற்று நடந்தது. இதற்கு அப்பகுதியில் இருந்த கற்கள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் முனியப்பன் கோவில் வழியே காவிரியில் வெளியேற்றப்படும் குடிநீர் நேற்று மட்டும், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் வெளியேற்றப்பட்டது. இன்று முதல் வழக்கம்போல் காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை மேட்டூர் பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ