மேலும் செய்திகள்
மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
22-Jul-2026
பனமரத்துப்பட்டி; மல்லுாரில் செயல்படும், பனமரத்துப்பட்டி அரசு மாதிரி பள்ளியின் மாணவ, மாணவியர் பங்-கேற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.தலைமை ஆசிரியர் நடராஜன் பேரணியை துவக்கி வைத்தார். மாதிரி பள்ளியில் தொடங்கிய பேரணி, சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் மல்லுார் பஸ் ஸ்டாப், தபால் நிலையம் நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை சென்ற-டைந்தது. பேரணியில், மக்கள் தொகை கணக்கெ-டுப்பின் முக்கியத்துவம், பொதுமக்கள் சரியான தகவல் வழங்குதல், நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம் என்-பன உள்ளிட்ட விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி சென்றனர். மேலும், மக்கள் தொகை கணக்கெ-டுப்பு குறித்து விழிப்புணர்வு கோஷமிட்டபடி சென்றனர்.பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ், தேசிய பசு-மைப்படை மாணவ, மாணவியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, ஆசிரி-யர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.
22-Jul-2026