உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்

சேலம்:திண்டுக்கல் - மதுரை இடையே பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இன்று, நாளை, ஆக., 9, 10, 12 ஆகிய நாட்களில், மதியம், 2:00 மணிக்கு புறப்படும் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படுகிறது. அதேபோல் மறுமார்க்க ரயில், ஆக., 8, 9, 10, 11, 13 ஆகிய நாட்களில், அதிகாலை, 5:20க்கு செங்கோட்டைக்கு பதில், திண்டுக்கல்லில் புறப்பட்டு ஈரோடு வரை செல்லும்.இரு மார்க்கத்திலும் செங்கோட்டை - திண்டுக்கல் இடையேயான சேவை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !