நாளை கரூரில் பராமரிப்பு ரயில் சேவையில் மாற்றம்
சேலம், கரூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில், நாளை தண்டவாள புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால் அன்று, கரூர் வழியே இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு டவுனில் இருந்து, காலை, 6:30 மணிக்கு, திருச்சிக்கு புறப்படும் ரயில், கரூருக்கு முன்னதாக வீராராக்கியம் வரை மட்டும் இயக்கப்படும். பராமரிப்பு பணி முடிந்த பின், அந்த ரயில் கரூரில் இருந்து திருச்சி வரை, முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து காலை, 6:00 மணிக்கு, சேலத்துக்கு புறப்படும் ரயிலும், வீராராக்கியம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சேலத்தில் இருந்து, மதியம், 2:05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மாறாக, கரூர் சந்திப்பில் இருந்து, மதியம், 3:40க்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்கிறது.எல்.ஹெச்.பி., பெட்டிகள்கேரள மாநிலம் எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தற்போது வரை, வழக்கமான பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. வரும், 20 முதல், அந்த ரயிலில் எல்.ஹெச்.பி., பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மறுமார்க்க ரயிலில், வரும், 21ல் இருந்து, எல்.ஹெச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படுவும். இந்த பெட்டிகளை, அதிவேகத்தில் இயக்குவதோடு, வழக்கமான பெட்டிகளை விட, பயணியர் திறன் அதிகம் கொண்டது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.