மா.திறன் மாணவர்களுக்கு உபகரணம்கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் வழங்கல்
மேட்டூர்:மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் சார்பில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கொளத்துார், மேட்டூர் மாற்றுத்திறன் மாணவர் சிறப்பு கல்வி மைய மறு சீரமைப்பு பணிகள், மாணவர்களுக்கு சக்கர நாற்காலி, செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. இரு வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டி, வரைபடங்கள், ஒலிபெருக்கி, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமை வகித்தார். கெம்ப்ளாஸ்ட் நிறுவன தலைவர் கஜேந்திரன், துணைத்தலைவர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். கொளத்துார் வட்டார கல்வி அலுவலர், மேட்டூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய பயிற்றுனர், சிறப்பு ஆசிரியர் பங்கேற்றனர். இதன் ஏற்பாடுகளை நிறுவனத்தை சேர்ந்த விவேக், சாலமன் செய்திருந்தனர்.