அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் காணொலியில் முதல்வர் திறப்பு
கெங்கவல்லி, டிச. 24-ஜங்கமசமுத்திரம், அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்தை, வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறந்து வைத்தார்.கெங்கவல்லி அருகே, ஜங்கமசமுத்திரம் தொடக்கப் பள்ளியில், 32.80 லட்சம் ரூபாயில், புதிதாக இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. நேற்று, இந்த கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் பெரியசாமி, வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ், பி.டி.ஓ., சந்திரசேகரன், ஊராட்சி துணைத் தலைவர் சங்கீதா, வட்டார மேற்பார்வையாளர் ராணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.