கிராம சபையில் முதல்வர் ஸ்டாலின் உரை:வீடுகள் தோறும் இணைய சேவைக்கு ஏற்பாடு
சேலம்:தமிழகத்தில் உள்ள, 12,525 ஊராட்சிகளில் முதல் கட்டமாக, 10,000 ஊராட்சிகளுக்கு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்(டான்பினெட்) மூலம், அதிவேக இணைய தள சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று நடந்த கிராம சபை கூட்டங்களில், இணையதளம் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரை ஒளிபரப்பப்பட்டது.சேலம் மாவட்டத்தில், 269 ஊராட்சிகளில், இணையதள சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் பனமரத்துப்பட்டி ஒன்றியம் பாரப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நேற்று, இணையதளம் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரை மக்கள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது. பனமரத்துப்பட்டி ஒன்றிய தனி அலுவலர் பி.டி.ஓ., கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'டான்பினெட்' என்பது, கிராம மக்கள், மாதம், 119 ரூபாய் கட்டணத்தில், இண்டர்நெட் வசதி பெறலாம். ஊராட்சிகள் தோறும் செயல்படும் சேவை மையத்தில் இருந்து, மக்களின் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, கிராம சபா கூட்டத்தில், 'டான்பினெட்' இணைய தளம் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரை ஒளிபரப்பப்பட்டது.எம்.பி.,யிடம் கேள்விஅப்பமசமுத்திரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு, ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமை வகித்தார். அதில், தி.மு.க.,வை சேர்ந்த, கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், மக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது பெண்கள், 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. எங்களுக்கு எப்போது உரிமைத்தொகை கிடைக்கும்' என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'தமிழக அரசு விரைவில் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.சந்துக்கடைகள்அயோத்தியாப்பட்டணம், வீராணத்தில் நடந்த கூட்டத்தில், பல்வேறு இடங்களில், 24 மணி நேரமும் சந்துக்கடைகள் செயல்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினர். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா(தணிக்கை), பி.டி.ஓ., குணலட்சுமி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அதேபோல் தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், 9 இடங்களில் தெருவிளக்கு; பழுதான போர்வெல் மின் மோட்டார் சரிசெய்தல் உள்பட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குடிநீர் பிரச்னைகெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சி, பள்ளக்காட்டில் நடந்த கூட்டத்துக்கு, துணை பி.டி.ஓ., கவிதா தலைமை வகித்தார். அப்போது, 7, 8, 9வது வார்டு மக்கள், 'சீரான குடிநீர் வினியோகம் இல்லை. ஊராட்சி, ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. ஆழ்துளை குழாய் கிணறு மூலமும் முறையாக வினியோகம் இல்லை' என பெண்கள் கேள்வி எழுப்பி, ஊரக வளர்ச்சி அலுவலர்களை சூழ்ந்து, வாக்குவாதம் செய்தனர். அப்போது கவிதா, 'நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தார்.இடைப்பாடி, ஆவணிப்பேரூர் கீழ்முகம் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு, பி.டி.ஓ., ஆரோக்கியதாஸ் கென்னடி தலைமை வகித்தார். அதில் சேலம் எம்.பி., செல்வகணபதி உள்பட பலர்பங்கேற்றனர்.உடனே ரூ.7 லட்சம்ஒதுக்கிய அமைச்சர்ஓமலுார் ஒன்றியம் கோட்டமேட்டுப்பட்டியில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:இங்கு மக்கள், 3 கோரிக்கை வைத்தனர். முதல்கட்டமாக குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்த, 7.84 லட்சம் ரூபாய் நிதி உடனே ஒதுக்கப்படுகிறது. ஆர்.சி.செட்டிப்பட்டி ஆதிதிராவிடர் காலனி, வண்ணார் குட்டை பெயர் மாற்றுவது குறித்து, தமிழக அரசு முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஓமலுார் பி.டி.ஓ., உமாசங்கர், பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.