முதல்வரின் ரோடுஷோ அமைச்சர் ஆலோசனை
ஓமலுார் :தமிழக முதல்வர் ஸ்டாலின், வரும், 12ல், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். இரும்பாலையில் நடக்கும் அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்க உள்ளார். முன்னதாக மேட்டூரில் இருந்து வரும் முதல்வர், பஞ்சுகாளிப்பட்டி, ஓமலுார், சுங்கச்சாவடி, வெண்ணங்குடி முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில், 'ரோடு ேஷா'வில் பங்கேற்க உள்ளார். இதனால், நேற்று மாலை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகளுடன், ஓமலுார் ஆய்வு மாளிகையில் ஆலோசனை நடத்தி, பின் சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.