உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குருணை மருந்தை சாப்பிட்ட குழந்தை பலி

குருணை மருந்தை சாப்பிட்ட குழந்தை பலி

கெங்கவல்லி: தலைவாசல் அருகே புனல்வாசலை சேர்ந்தவர் குமரேசன், 35. காட்டுக்கோட்டையில் உள்ள லாரி பட்டறையில் கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி செல்வமணி, 30. இவர்களது, 3 வயது ஆண் குழந்தை பூவரசன். நேற்று கொட்டகையில் குழந்தையை துாங்க வைத்துவிட்டு, செல்வமணி, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். மதியம், 2:00 மணிக்கு, குழந்தையை பார்த்தபோது மயங்கி கிடந்தது. உடனே, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறினர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'கொட்டகையில் இருந்த குருணை மருந்தை எடுத்து குழந்தை சாப்பிட்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி