உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் அரசியல் களத்துக்கு ஆயத்தம்

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் அரசியல் களத்துக்கு ஆயத்தம்

சேலம், சேலம், 4 ரோட்டில், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின், 4 மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு மண்டல செயலர் அருள் ரொசாரியோ தலைமை வகித்தார்.பொதுச்செயலர் ஜான் பிரகாஷ் எபினேஷன் பேசியதாவது: நம் இயக்கம் அரசியல் களத்தில் பங்கேற்க உள்ளதால், நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும். இதற்கு ஆகஸ்டில் இருந்து தமிழகம் முழுதும் மண்டல வாரியாக பொது கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன், மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு முகாம்கள் அமைத்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இதன்மூலம், 2026 சட்டசபை தேர்தலில் நம் இயக்கத்துக்கு, உரிய அங்கீகாரம் பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.அமைப்பு செயலர் டேவிட் சாலமேன், செயலர்களான, சேலம் மத்திய மாவட்டம் புகழேந்தி, மேற்கு மாவட்டம் பவுல்ராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ரோஸ்லின் ஜீவா, மேற்கு மாவட்டம் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ