உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசல் சேலம் வழியே சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசல் சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம்: கிறிஸ்துமஸ் பண்டிகை கூட்ட நெரிசலை குறைக்க, பெங்களூ-ரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் நேற்று இரவு, 11:00 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே, இன்று மாலை, 4:30 மணிக்கு கொச்சுவேலி சென்ற-டையும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி-பெங்களூரு சிறப்பு ரயில் இன்று மாலை, 5:55 மணிக்கு புறப்பட்டு போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே நாளை காலை, 11:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். சேலம் ஜங்சனுக்கு நாளை காலை, 5:30 மணிக்கு வந்து செல்லும்.இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை