உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சி.ஐ.டி.யு., மறியல்; 140 பேர் கைது

சி.ஐ.டி.யு., மறியல்; 140 பேர் கைது

சேலம்: சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், சேலம், கோட்டை ஸ்டேட் வங்கி அருகே நேற்று, சாலை மறியல் போராட் டம் நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அதில், தொழிலாளர்களை பாதிக்கும், 4 சட்ட தொகுப்புகளை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தில், மகாத்மா காந்தி பெயர் நீக்கிய அரசாணையை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலர் கோவிந்தன், பொருளாளர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர். டவுன் போலீசார் பேச்சு நடத்தியும் பலன் இல்லாததால், மறியலில் ஈடுபட்ட, 20 பெண்கள் உள்பட, 140 பேரை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை