உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புது வீரர்களுக்கு பயிற்சி இயக்குனர் ஆலோசனை

புது வீரர்களுக்கு பயிற்சி இயக்குனர் ஆலோசனை

சேலம், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, 98 தீயணைப்பு வீரர்களுக்கு, 3 மாத அடிப்படை பயிற்சி, சேலம், வீரபாண்டியில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கில் நடந்து வருகிறது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால், நேற்று பயிற்சியை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார். இதில் தீயணைப்போர் பயிற்சி பள்ளி முதல்வர் மகாலிங்கமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலர் வேலு, நாமக்கல் அலுவலர் செந்தில்குமார், தர்மபுரி அலுவலர் அம்பிகா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ