உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவை - லோகமான்ய திலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்

கோவை - லோகமான்ய திலக் ரயில் 4 மணி நேரம் தாமதம்

சேலம்: கோவை - லோகமான்ய திலக் ரயில், நேற்று 4 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்பட்டதால், முன்பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.கோவை - மும்பை லோகமான்ய திலக் ரயில், தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை, 8:50 மணிக்கு கிளம்ப வேண்டிய கோவை - லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ், 4 மணி நேரம், 45 நிமிடம் தாமதமாக, மதியம் 1:35 மணிக்கு புறப்பட்டது. காலை, 11:20 மணிக்கு சேலம் வர வேண்டிய இந்த ரயில் மாலை, 4:04 மணிக்கு வந்தது.நான்கு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்ததால், முன்பதிவு செய்து ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி ஸ்டேஷன்களில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மறு மார்க்க ரயில் வருவதில் ஏற்பட்ட தாமதமே, இதற்கு காரணம் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை