உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் வசூல்? பி.டி.ஓ.,விடம் தி.மு.க.,வினர் வாக்குவாதம்

கனவு இல்ல திட்ட பயனாளிகளிடம் வசூல்? பி.டி.ஓ.,விடம் தி.மு.க.,வினர் வாக்குவாதம்

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்-டத்தில், 45 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா, 3.50 லட்சம் ரூபாயில், வீடுகள் கட்ட நிதி ஒதுக்கி பணி நடக்கிறது. இந்த பணியை ஆய்வு செய்ய சென்ற, ஒன்றிய அலுவலக தற்காலிக பணியாளர்கள் சிலர், தலா, 1,000 ரூபாய் தருமாறு பயனாளிகளிடம் கேட்டுள்ளனர்.இதை அறிந்த உள்ளூர் தி.மு.க.,வினர், மக்க-ளுடன் வந்து ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., பரமசிவத்திடம் (கி.ஊ.,) முறையிட்டனர். அப்போது, 'கலைஞர் கனவு இல்ல திட்ட பயனா-ளிகளிடம் எதற்காக பணம் கேட்கிறீர்கள். இதுகு-றித்து கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளோம்' என்றனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவா-தமும் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை தி.மு.க.,வினர் சமூக வலைதளத்தில் பதிவிட்-டனர். இதுகுறித்து ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து பி.டி.ஓ.,விடம் கேட்டபோது, 'பைத்துார் தி.மு.க.,வினர் என்னிடம் தகராறு செய்யும் நோக்கில் வந்தனர். அதுகுறித்த வீடி-யோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். யாரோ பணம் கேட்டதற்கு நான் என்ன செய்ய முடியும். உயரதிகாரிகள் சொன்னால் புகார் அளிப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை