உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடுகளை சுற்றி சுத்தம்; கலெக்டர் அறிவுரை

வீடுகளை சுற்றி சுத்தம்; கலெக்டர் அறிவுரை

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, தானகுட்டிபாளையத்தில், 1.37 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை வளாகத்தை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து டவுன் பஞ்சாயத்து சார்பில் திடக்கழிவு மேலாண் திட்டத்தில், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் பிரித்து, உரம் தயாரிக்கும் பணியை பார்வையிட்டார்.அதேபோல் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் பதித்த சாலைகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். மேலும் டவுன் பஞ்சாயத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின், 'வீடுகளை சுற்றி குப்பை கொட்டுவதை தவிர்த்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்' என, மக்களிடம் அறிவுறுத்தினார்.தொடர்ந்து இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை, கலெக்டர் பார்வையிட்டார். டவுன் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் குருராஜன், ஆட்டையாம்பட்டி செயல் அலுவலர் மேகநாதன்(பொ), இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்து தலைவர் நந்தினி உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ